உலகம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிர்வாணப்படங்கள் – அதிர்ச்சியில் ஸ்பெயின் நகரம்.

(UTV | கொழும்பு) –

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட மாணவிகளின் நிர்வாணப்படங்கள் ஸ்பெயின் நகரமொன்றை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. ஸ்பெயினின் நகரமொன்றில் வசிக்கும் இளம்பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் இணையங்களில் வெளியாகியுள்ளன என்ற செய்தி அந்த நகரமக்களிற்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முன்வைத்து இந்த படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

முழுமையாக ஆடையணிந்த யுவதிகள் சிறுமிகளின் படங்களை அவர்களின் சமூக ஊடகங்களில் இருந்து எடுத்து பின்னர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவற்றை மாற்றியுள்ளனர். ஸ்பெயினின் அல்மென்டிரலெஜோ நகரத்தை சேர்ந்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர் – இதுவரை 11 முதல் 17 வயது வரையிலான 20 பெண்கள் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். பாடசாலையிலிருந்து வந்த எனது மகள் தனது படம் மேலாடையின்றி சமூக ஊடகங்களில் காணப்படுகின்றது என தெரிவித்தார் என 14 வயது சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.

நான் மகளிடம் நீ எந்த தருணத்திலாவது நிர்வாணமாக படம் எடுத்தது உண்டா என கேட்டேன் மகள் அதற்கு இல்லை இது போலியான படங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கியுள்ளனர் என குறிப்பிட்டார் என தாயார் தெரிவித்துள்ளார்.
எனது வகுப்பில் உள்ள ஏனையவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்த சிறுமி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட 28 யுவதிகளின் பெற்றோர் நீதி கோரி குழுவொன்றை அமைத்துள்ளனர் என அந்த பெண் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் இவ்வாறான படங்களை உருவாக்கி சமூகஊடகங்களில் பதிவிட்டதில் 11 மாணவர்களிற்கு தொடர்புள்ளமை தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு மாணவியை போலி படத்தை காண்பித்துஅவரிடமிருந்து பணம் பறிக்க முயன்றனர் என்ற குற்றச்சாட்டு குறித்தும் விசாரணைகள் இடம்பெறுகின்றன. இவ்வாறான படங்கள் வெளியானமை யுவதிகளிற்கு பல்வேறு விதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிலர் அதனை சுலபமாக எடுத்துக்கொண்டுள்ளனர் சிலர் மோசமான மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் என 14 வயது சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார். 30,000 பேரை கொண்ட அந்த ஒலிவ் மற்றும் ரெட்வைனிற்கு பிரபலமானது,எனினும் தற்போது தேசிய செய்திகளில் தலைப்பில் இடம்பெறும் அளவிற்கு அந்த நகரம் மாறியுள்ளது.

எத்தனை பிள்ளைகளின் படங்கள் உள்ளன அவை ஆபாச பட இணையத்தளங்களில் வெளியாகியுள்ளனவா என அச்சப்படுகின்றோம் என மகப்பேறு மருத்துவரான மிரியம் அல் அடிப் தெரிவித்துள்ளார். இந்த மருத்துவர் பாதிக்கப்பட்டவர்களிற்கு ஆறுதல் அளிக்கும் விடயத்தை வெளியிட்ட பின்னரே இந்த விடயம் பலருக்கு தெரியவந்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தும் இஸ்ரேல்! பலஸ்தீனின் நிலை என்ன?

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 95,735 பேருக்கு தொற்று

பெட்ரோல் டீசல் ஏற்றுமதிக்கு ரஷ்யா தற்காலிக தடை!