உலகம்

செப். 13 முதல் கட்டுப்பாடுகள் தளா்வு

(UTV | கொழும்பு) –   சிங்கப்பூரில் இந்தியா்கள் உள்ளிட்ட வெளிநாட்டுப் பணியாளா்களுக்கு கொரோனா கட்டுப்பாடுகளை வரும் திங்கட்கிழமை முதல் தளா்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக வெளிநாட்டுப் பணியாளா்கள் அவா்களது தங்குமிடங்களைவிட்டு வெளியிடங்களுக்குச் செல்ல கடந்த ஏப்ரல் முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்தக் கட்டுப்பாடுகளை திங்கள்கிழமை முதல் படிப்படியாகத் தளா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதலில் ‘லிட்டில் இந்தியா’ பகுதியில் இந்தத் தளா்வுகள் அமுல்படுத்தப்படும்.

இந்தப் பகுதிக்கு வருவதற்கு முன்னரும், வந்து சென்ற 3 நாட்களுக்குப் பின்னரும் வெளிநாட்டுத் தொழிலாளா்கள் துரித கொரோனா பரிசோதனை (ஆஓா்டி) செய்துகொள்ள வேண்டும்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பணியாளா்கள், நோய் பரவல் தடுப்பு விதிமுறைகளைக் கடுமையாகக் கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related posts

அமெரிக்காவில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

கொரோனா தடுப்பூசிகளை வாங்கும் திட்டமில்லை

54 ஆவது ஜெனிவா கூட்டத்தொடர் செப்டெம்பர் 11 இல் ஆரம்பம்!