வகைப்படுத்தப்படாத

சென்னை மெட்ரோ ரயிலில் இன்று முதல் கட்டணம் வசூல்?

(UTV|INDIA) மெட்ரோ ரயிலில் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் 45.1 கி.மீ. தூரத்திற்கான முதல் வழித்தட திட்டம் முடிந்த நிலையில் கட்டணம் குறைக்கப்படாததால் இந்த திட்டம் ஏழைகளுக்கு பயன் தருவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விரைவான சேவையை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கத்துடன் கடந்த 2009ம் ஆண்டு மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது. இதையடுத்து முதல் கட்டமாக கடந்த 2015ம் ஆண்டு கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையில் 10 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது.

இதன்பிறகு படிப்படியாக மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்து 35 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை தற்போது செயல்படுகிறது. இந்தநிலையில், முதல் வழித்தட திட்டத்தின் வண்ணாரப்பேட்டையில் இருந்து டி.எம்.எஸ் வரையிலான 10 கி.மீட்டர் தூரத்திலான சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கடந்த 10-ம் திகதி பிற்பகல் 3.15 மணிக்கு காணொலி காட்சி மூலம் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார். மெட்ரோ ரயிலில் 4 நாட்களாக பொதுமக்கள் கட்டணமின்றி செல்லலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து மெட்ரோ ரயிலுக்கான புதிய கட்டண பட்டியலை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டது. அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.60ஆகவும், குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.10ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டாலும் குறையாத கட்டணத்தால் மெட்ரோ ரயில் சேவையானது இன்னும் ஏழைகளுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது என பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.

 

 

 

 

Related posts

Supreme Court serves charge sheet on Ranjan

நைஜீரியாவில் எண்ணெய் டேங்கர் விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

Kalu Ganga rising to flood level