விளையாட்டு

சென்னையை வீழ்த்திய ராஜஸ்தான்

(UTV | துபாய்) – இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 47ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 07விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக ருதுராஜ் கெய்வாட் ஆட்டமிழக்காமல் 101 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ராகுல் தெவாடியா 39 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில், 190 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் 17.3 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக ஷிவம் துபே ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

அத்துடன், அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஜெய்ஸ்வால் 19 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் ஷர்துல் தாகூர் 30ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

Related posts

இன்று களமிறங்கும் CSK – MI

டி20 உலக கிண்ண இறுதிப்போட்டி இன்று

பாபர் அசாம் தலைமையில் நாளை பாகிஸ்தான் அணி இலங்கைக்கு