கேளிக்கை

சூர்யா முன் சாய் பல்லவி கதறி அழுதது இதற்கு தானா?

(UTV|INDIA) செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம், என்ஜிகே. வரும் 31ம் திகதி வெளியாகிறது. இதில் நடித்தது குறித்து சாய் பல்லவி கூறியதாவது: நான் பள்ளியில் படிக்கும்போது காக்க காக்க படத்தை பார்த்துவிட்டு  சூர்யாவின் தீவிர ரசிகையானேன். இப்போது அவருக்கு ஜோடியாக என்ஜிகே படத்தில் நடித்ததை நினைத்து, இது கனவா? நிஜமா என்று சொல்ல முடியாமல் தவிக்கிறேன்.

இதில் ஒரு முக்கியமான காட்சியில் சூர்யாவுடன் சரியாக நடிக்க முடியாமல் கஷ்டப்பட்டேன். ஆனால், எதற்குமே டென்ஷனாகாத செல்வராகவன், மீண்டும் மீண்டும் அந்த காட்சியை படமாக்கினார். இதனால் நேரம் விரயமானது. ரீடேக்  எடுத்துக்கொண்டே இருந்ததால், ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தவர்கள் என்னை ஏளனத்துடன் பார்ப்பதாக உணர்ந்தேன். அடுத்த நிமிடம் கண்களில் இருந்து நீர் வழிந்தது.

சூர்யா முன் கதறியழுதேன். அவர் என்னை சமாதானப்படுத்தினார். ‘எனக்கும் இந்த அனுபவம் உண்டு. போகப்போக சரியாகிவிடும். கவலைப்படாதே. தைரியமாக நடி’ என்று உற்சாகப்படுத்தினார். பல ரீடேக்குகளுக்கு பிறகே  என்னால் அந்த காட்சியில் ஓரளவு நடிக்க முடிந்தது. இதுபோல் எந்த  படத்துக்கும் நான் கஷ்டப்பட்டது இல்லை. படத்தில் இன்னொரு ஹீரோயின் ரகுல் பிரீத் சிங்  இருந்தாலும், அவருடன் எனக்கு ஈகோ மோதல் ஏற்பட்டது கிடையாது.

 

 

 

Related posts

என் வழி தனி வழி.. ஒரு விடியோவில் கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்த யுவராஜ்

உலகம் முழுவதும் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் இதோ…

சூர்யா படத்தில் ஜோதிகா சட்டத்தரணி