உள்நாடு

‘சூரியவெவயில் ஊட்டச்சத்து குறைபாடு கணக்கெடுப்பு பொய்’  

(UTV | கொழும்பு) –   சூரியவெவ பிரதேசத்தில் 80 வீதமான சிறுவர்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை என ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் எச்.பி. சுமனசேகர நேற்று தெரிவித்தார்.

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள கொஸ்வாடியாவிற்கு குறிப்பிட்ட குழுவொன்று வந்து பல வீடுகளில் கணக்கெடுப்பு நடத்தியுள்ளதாக அவர் கூறினார்.

“இந்த சர்வே அறிக்கையின் அடிப்படையில் ஊடகங்கள் செய்தி வெளியிட்ட பிறகுதான் நானும் இதைப் பற்றி அறிந்தேன்,” என்று அவர் கூறினார்.

சூரியவெவ சுகாதார வைத்திய அதிகாரி, மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோரிடம் உள்ளீடுகளை பெற்றுக்கொள்ளாத காரணத்தினால் சூரியவெவவின் போஷாக்கு தரம் தொடர்பில் இந்த குழுவினரால் தொகுக்கப்பட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

ஒவ்வொரு மாதமும் சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகளுடன் மக்களின் சுகாதார நிலை குறித்து விவாதித்து வருவதாகவும், எந்த சந்தர்ப்பத்திலும் இந்த நிலை தனக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

Related posts

புத்தளத்தில் ஒரு தொகை மஞ்சள் மீட்பு.

மண்ணினுள் மறைத்து பாலை மரக் குற்றிகளை கொண்டு சென்றவர் கைது!

பல்கலைக்கழக மாணவன் கைது