கேளிக்கை

சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய நாயகன் காலமானார்

(UTV|AMERICA)-ஹாலிவுட்டில் பல சூப்பர் ஹீரோக்களின் வடிவங்களை உருவாக்கிய பிரபல காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ (95) உடல்நலக்குறைவால் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நேற்று காலமானார்.
மார்வெல், டிசி காமிக்ஸ்ஸின் பல்வேறு கதாபாத்திரங்களை உருவாக்கியவர் ஸ்டான் லீ என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் பிரபலமான ஸ்பைடர் மேன், அவெஞ்சர்ஸ், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், தோர், பென்டாஸ்டிக் ஃபோர், எக்ஸ் மேன் உள்ளிட்ட மார்வெல்லின் பல காமிக்ஸ் கதாபாத்திரங்களையும், சூப்பர் மேன், அக்குவா மேன், பேட்மேன், சான்ட்மேன், ஒன்டர்வுமன் உள்ளிட்ட டிசி காமிக்ஸ்ஸின் பல்வேறு கதாபாத்திரங்களையும் இவர் உருவாக்கியிருக்கிறார்.

மேலும் மார்வெல் உருவாக்கத்தின் பிரம்மாண்ட படைப்புகளிர் சிறப்பு தோற்றங்களில் நடித்தும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். 1961-ல் ஜேக் கெர்பியுடன் இணைந்து இவர் மார்வெல் நிறுவனத்தை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

10 வினாடிகளுக்கு குறைவாகவே பாலியல் தொல்லை – இது குற்றமில்லையெ நீதிமன்றம் தீர்ப்பு

சூர்யா முன் சாய் பல்லவி கதறி அழுதது இதற்கு தானா?

காதலருடன் எமி ஜாக்சன் நிச்சயதார்த்தம்