கேளிக்கை

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ஆபாச நடிகை கேரக்டரில் பிரபல நடிகை

விஜய் சேதுபதி நடிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில் இந்த படத்தில் பாகுபலி’ புகழ் நடிகை ரம்யாகிருஷ்ணன், ஆபாச நடிகை கேரக்டரில் நடித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா சமீபத்தில் அளித்த பேட்டியில் இதனை உறுதி செய்துள்ளார். மேலும் இந்த கேரக்டருக்கு முதலில் நதியா தேர்வு செய்யப்பட்டதாகவும், ஆனால் அதன் பின்னர் ரம்யாகிருஷ்ணன் நடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தில் விஜய்சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் கடந்த 2004ஆம் ஆண்டு தமிழகத்தில் ஏற்பட்ட சுனாமியின் பின்னணியில் கதை நகர்வதாக கூறப்படுகிறது.

விஜய்சேதுபதி, சமந்தா, பகத் பாசில், மிஷ்கின், ரம்யாகிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

 

 

 

Related posts

ஜோதிகாவின் அடுத்த படம் ராட்சசி…

ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாத ஓவியா

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க வரும் அனுஷ்கா