சூடான செய்திகள் 1விளையாட்டு

‘சூப்பர் ஓவர்’ விதிமுறையில் மாற்றம்

 (UTVNEWS | COLOMBO) – சர்வதேச கிரிக்கெட் நிறுவனமானது சூப்பர் ஓவரில் கடைபிடிக்கப்பட்டு வந்த விதிமுறைகளை தற்போது மாற்றியமைத்துள்ளது.

ஐ.சி.சி. நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் ஒரு போட்டி சமநிலையில் முடிந்தால், போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் பயன்படுத்தப்படும். இந்த சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் ஒரே ஓட்டம் எடுக்கும் பட்சத்தில் மீண்டும் சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்படும்.

இந்த முடிவு ஐ.சி.சி.யின் கிரிக்கெட் குழுவின் பரிந்துரையின் படி எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விதிகள் ஐ.சி.சி.யின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு – 20 தொடர்களில் அமல்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.

Related posts

கலகொட அத்தே தேரருக்காக அமைச்சர் காமினி முன்வருகிறார்

சவூதியில் முதல்முறையாக பெண்கள் கால்பந்து போட்டி

பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் இன்று பேச்சுவார்த்தை-போக்குவரத்து அமைச்சு