கேளிக்கை

சுஷாந்த் மரணம் – ஆம்புலன்ஸ் உதவியாளரின் கருத்தால் பரபரப்பு

(UTV | இந்தியா) – சுஷாந்த் சிங்கின் கால்கள் வளைந்து இருந்தன என்றும் அவர் உடல் மஞ்சள் நிறமாக மாறி இருந்தது என்றும் ஆம்புலன்ஸ் உதவியாளர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம் 14 ஆம் திகதி தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

அவர் தற்கொலை செய்துகொண்டது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, சுஷாந்த் சிங்கின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் உதவியாளர், தனது பெயரைக் குறிப்பிடாமல் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார். ‘சுஷாந்த் சிங்கின் உடல் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டது. அவர் உடலில் சில அடையாளங்கள் இருந்தன. அவர் கால்கள் வளைந்து இருந்தன. அவர் வாயில் இருந்து நுரை வெளியில் வந்திருக்கவில்லை’ என்று கூறியுள்ளார்.

மேலும் தனது அனுபவத்தின் அடிப்படையில், சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில்தான் அவர் உடல் இருந்ததாகத் தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, சுஷாந்த் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகக் கூறப்பட்டு வரும் நிலையில் ஆம்புலன்ஸ் உதவியாளரின் இந்தத் தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கை சுஷாந்த், மூச்சுத்திணறல் காரணமாகத்தான் இறந்தார் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.

Related posts

கர்ப்பமாக இருக்கும்போது இப்படி ஒரு உடையிலா பொது இடத்திற்கு வருவது?

லண்டன் மியூசியத்தில் தீபிகா படுகோனுக்கு சிலை

மஹா படத்தின் மூலம் புதிய மைல்கல்லை தொட்ட ஹன்சிகா…