கேளிக்கை

சுஷாந்தின் கடைசி படம் வெளியாகும் திகதி அறிவிப்பு

(UTV|இந்தியா )- சுஷாந்த் கடைசியாக நடித்த ‘தில் பெச்சாரா’ படத்தின் வெளியாகும் திகதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சுஷாந்த் கடைசியாக நடித்த படம் ‘தில் பெச்சாரா’. இப்படத்தை மே மாதம் வெளியிட திட்டமிட்டிருந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக படம் வெளியாகும் திகதி ஒத்திவைக்கப்பட்டது இதனிடையே இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்தது.

ஜூலை 24 ஆம் திகதி வெளியாக உள்ள இப்படத்தை அனைத்து ரசிகர்களும் காணலாம் முகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தில் பெச்சாரா’ படத்தில் சுஷாந்த் சிங், சைப் அலி கான், சஞ்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Related posts

சிம்புவுடன் மோதும் சிவகார்த்திகேயன்

மலையாள படத்தில் இணையும் ஜாக்கிசான்

‘மாஸ்டர்’ ட்ரெய்லர் வெளியீட்டு திகதி