வகைப்படுத்தப்படாத

சுவையான ரைஸ் வெஜிடபிள் கட்லெட்…

தேவையான பொருட்கள்: 

அரிசி சாதம் – 1 கப்
உருளைக்கிழங்கு – 1
மிக்ஸ்டு வெஜிடேபிள் (பீன்ஸ், கேரட், குடைமிளகாய்) – 1 கப்
வெங்காயம் – 1
இஞ்சி – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்
சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை: 

உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

அரிசியை  வேகவைத்து ஆறியதும் மசித்து கொள்ளவும்.

காய்கறிகள், வெங்காயம்,பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, அரிசி , பொடியாக நறுக்கிய காய்கறிகள், வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள, மல்லித்தூள், சோள மாவு, கடலைமாவு சேர்த்து கையால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு தட்டில் பிசைந்து வைத்துள்ளதை கட்லெட் வடிவில் தட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

சூப்பரான ரைஸ் வெஜிடபிள் கட்லெட் தயார்.

 

Related posts

கொழும்பு ஸ்ரீ ஜயவர்தன புற கோட்டை மாநகர சபை உத்தியோகபூர்வ முடிவுகள்

Iran nuclear deal: Enriched uranium limit breached, IAEA confirms

கவுதமாலா எரிமலை வெடித்து சிதறியதில் பலி எண்ணிக்கை 109 ஆக அதிகரிப்பு