உள்நாடு

சுவிஸ்குமார் தப்பிக்க உதவிய முன்னாள் DIGக்கு 04 வருட கடூழிய சிறை

வித்தியா கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான சுவிஸ் குமாரை தப்பிக்க உதவிய குற்றச்சாட்டில், வடமாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் குற்றவாளியான சுவிஸ்குமாரை தப்பிக்க உதவிய வழக்கு, நேற்று (20) வவுனியா மேல் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எம்.மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பணம் பெற்றுக்கொண்டு சுவிஸ்குமாரை தப்பிக்க உதவிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து, வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், 50 ஆயிரம் ரூபாய் குற்றப்பணமும் அறவிடப்பட்டது.

மற்றைய சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் சிறிகஜன் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளமையினால் அவருக்கு திறந்த பிடியாணையும் வவுனியா மேல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது.

Related posts

தனியார் துறையின் குறைந்த சம்பளத்தை 25000 ரூபா வரை அதிகரிப்பதற்கான விதிமுறைகள் கொண்டு வரப்படும் – சஜித்

editor

உடற்பயிற்சி செய்தவர்கள் மீது கார் மோதி விபத்து – 35 பேர் பலி – 43 பேர் காயம்

editor

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை