சூடான செய்திகள் 1

சுழிபுரம் சிறுமி கொலை வழக்கின் சந்தேக நபருக்கு விளக்க மறியல்

(UTV|COLOMBO)-சுழிபுரத்தில் சடலமாக மீட்கப்பட்ட 6 வயது சிறுமியை படுகொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சந்தேக நபர் நேற்று மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

சுழிபுரம் – காட்டுப்புலம் தமிழ் பாடசாலையில் தரம் 1 இல் கல்வி கற்கும் சிவநேஸ்வரன் றெஜினா கழுத்து நெரித்து கொல்லப்பட்டு பாழடைந்த கிணற்றில் வீசியெறியப்பட்ட நிலையில்கடந்த திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.

இவர் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம் காட்டுப்புலத்தை சேர்ந்தவராவார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தெபுவன பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை

ஆடைகள் மீதான உற்பத்திக்கும், ஏற்றுமதிக்கும் டிஜிட்டல்மயமாக்கலின் உதவி தேவைப்படுகின்றது

பல பெண்களை ஏமாற்றிய ஒருவர் கைது