வகைப்படுத்தப்படாத

சுற்று நிருபங்களை சுற்றி வையுங்கள்- நிவாரண பணிகளை செய்யுங்கள் – அமைச்சர் மனோ கணேசன்

(UDHAYAM, COLOMBO) – சட்டம், விதிகள் என்ற சுற்று நிருபங்களை சுற்றி வைத்து விட்டு நிவாரண பணிகளை செய்யுங்கள் என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன் மேலும் குறிப்பிடுகையில்,

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/manoganesan.jpg”]

தேவையான அளவு நிதி இருக்கின்றது. இந்திய அரசு முதல் பல்வேறு நட்புறவு நாடுகள் எங்களுக்கு உதவுகின்றன. சுத்தமான நீர், உலர் உணவு அல்லது சமைத்த உணவு, அவசியமான இடங்களில் படகுகள், கூடாரங்கள், மருந்து வகைகள், உள்ளாடைகள் உட்பட ஆடைகள் ஆகிய அனைத்தும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/manogan04.jpg”]

இவற்றை விநியோகிக்க இராணுவத்தினர், விமானப்படையினர், கடற்படையினர் இருக்கின்றனர். எனவே சுற்று நிருபங்களில் இருக்கின்ற விதிகளை காட்டி தாமதம் செய்யாமல், அவற்றை சுற்றி வைத்துவிட்டு நிவாரண பணிகளில் இறங்குங்கள். இதற்கு அனைத்து அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் துணை இருக்கின்றோம் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/manoganesan_05.jpg”]

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனும், பிரதி தலைவர் பழனி திகாம்பரமும் நேற்று முன்தினம் களுத்துறை மாவட்ட வெள்ள சேதங்கள் மற்றும் நிவாரண நடவடிக்கைகளை ஸ்தலத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/mano_9.jpg”]

மதுராவெளை பகுதியில் வெள்ளத்தில் மரணம் அடைந்தவர்களின் இறுதிக்கிரியைகளிலும் கலந்து கொண்டனர்.

அப்பிரதேசத்தில் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுக்கு உரிய பணிப்புரைகளையும், ஆலோசனைகளையும் அமைச்சர்கள் மனோ கணேசனும், பழனி திகாம்பரமும் வழங்கினர்.

Related posts

Indian finds missing father in SL after 21 years through YouTube video

நீர்கொழும்பு மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களுடனான சந்திப்பு- (படங்கள்)

මෙරට විදේශ සංචිතය ඉහලට