வணிகம்

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

(UTVNEWS|COLOMBO) – இந்த வருடத்தில் முதல் 9 மாத காலப்பகுதியில் சுமார் 14 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த மாதத்தில் 108,575 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கடந்த மாத காலப்பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலாப்பயணிகள் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகை வீழ்ச்சி அடைந்திருந்தது. தற்பொழுது இது வழமை நிலைக்கு திரும்பியிருப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related posts

பேஸ்புக் நிறுவனமான மெட்டாவுக்கு 1.2 பில்லியன் யூரோக்கள் அபராதம்

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி விகிதங்களை குறைத்தது

உலக சந்தையில் சரிந்தது தங்கம்