சூடான செய்திகள் 1

சுற்றுலா நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த யானை உயிரிழப்பு

(UTV|COLOMBO) – சீகிரியாவில் சுற்றுலா நடவடிக்கைகளுக்காக ஈடுப்படுத்தப்பட்டிருந்த வாசனா என்ற 18 வயதான யானை ஒன்று நேற்று(17) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

யானை நோய்வாய்பட்டிருந்ததை அறிந்திருந்தும் யானை பாகன் சுற்றுலா பயணிகளை அதன் மேல் ஏற்றி அனுப்பியதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த யானை நேற்றிய தினம் மாத்திரம் மூன்று முறை சுற்றுலா நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், நான்காவது பயணத்திற்காக சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற போதே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அமைச்சரவை இன்று மறுசீரமைக்கப்படவுள்ளது

ஜெனீவா சென்றதன் இரகசியம் என்ன?

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்!