உள்நாடு

சுற்றுலா நகரங்களுக்கான வீதிகளை மேம்படுத்த நடவடிக்கை

(UTV | கொழும்பு) – சுற்றுலா நகரங்களுக்கான வீதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைய சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் பிரதமர் இத்தீர்மானத்தை முன்னெடுத்துள்ளார்.

இதுவரை சுற்றுலா நகரங்களுக்கு செல்வதற்கான வீதிகள் மற்றும் பழுதடைந்த நிலையில் காணப்படும் அனைத்து வீதிகளையும் புனரமைக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் பிரதமர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, சுற்றுலாப் பயணம் மேற்கொள்வதற்கு பாதுகாப்பான நாடாக இலங்கை விளங்குவதாக வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் கவனம் திரும்பியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் பிரதான வருமான மார்க்கமாக காணப்படும் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும், விமான நிலையங்கள் திறக்கப்பட்டதன் பின்னர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவதற்கான முன்னேற்பாடாக இந்த வீதிகளை புனரமைக்கும் வேலைத்திட்டத்தை வெகுவிரைவில் ஆரம்பிக்குமாறு பிரதமர் வலியுறுத்தினார்.

Related posts

சம்பிக்க ரணவக்கவின் வாகன சாரதிக்கு பிணை [VIDEO]

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2000 வீட்டுத் தொகுதிகளை நிர்மாணிக்க திட்டம்

தீபாவளிப் பண்டிகை : சுகாதார அமைச்சின் அறிவித்தல்