கிசு கிசு

சுற்றுலா செல்ல சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கும் இடம்

(UTV | கொழும்பு) – கோண்டே நாஸ்ட் டிராவலர் என்று சுற்றுலா இதழ், தமது வாசகர்கள் தேர்வு செய்த, சுற்றுலா செல்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு சுற்றுலா செல்வதற்கு உலக அளவில் சிறந்த 20 நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் இலங்கை 17-வது இடத்தை பிடித்திருக்கிறது. அந்த நாடு 88.01 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு இலங்கை இந்த பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்திருந்தது.

சுற்றுலாவை பிரதான வருவாய் ஆதாரமாக கொண்ட இலங்கை, பொருளாதாரத்தில் மீளும் முயற்சியாக மீண்டும் சுற்றுலா துறைக்கு புத்துயிரூட்ட முயன்றுவருவது குறிப்பிட்டத்தக்கது. இந்த ஆண்டுக்கான, சுற்றுலா செல்வதற்கான சிறந்த நாடுகள் பட்டியலில் முதல் 3 இடங்களை போர்ச்சுக்கல், ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகள் பிடித்திருக்கின்றன.

Related posts

5000 ரூபா நாணயத்தாள் ரத்து?

டிக்-டாக் காணொளிகளுக்கு அடிமையான பிரபலத்திற்கு நேர்ந்த சோகம்!

ஜே.ஶ்ரீ ரங்கா மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் என்ன? [VIDEO]