வணிகம்

சுற்றுலா அபிவிருத்தி வலயமாக நுவரெலியாவை அபிவிருத்தி செய்ய திட்டம்

(UTV | கொழும்பு) – நுவரெலியா மாவட்டத்தின் சுற்றுலா அபிவிருத்தி வலயத்தில் சுற்றாடல் நேயமிக்க வேலைத்திட்டங்கள் நாளை ஆரம்பிக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாக நகர அபிவிருத்தி அதிகாரசபை இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கின்றது.

கித்துள்கலவிலிருந்து நுவரெலியா வரையும், நுவரெலியாவிலிருந்து கண்டி, பதுளை வரையும் விசேட சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இந்த பிரதான வீதிகளின் இருமருங்கும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நவீனமயப்படுத்தப்படவுள்ளது. பூங்கா, நடைபாதை, வர்த்தக கொட்டில்கள், சிற்றுண்டிச்சாலை உட்பட ஹொட்டல்களும் இங்கு அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விவசாயிகளுக்கு இலவசமாக உரம்

கடந்த 63 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக அரச வருமானத்தில் சேமிப்பு

பால் மாவுக்கான விலைகள் குறைப்பு