உள்நாடு

சுற்றுநிருபம் கல்வி சார்ந்த துறையினருக்கும் பொருந்தும்

(UTV | கொழும்பு) –  சகல அரச பணியாளர்களையும் வழமைப் போன்று சேவைக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபத்துக்கு அமைய, கல்வி சார்ந்த துறையினரும் செயற்பட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதுதொடர்பான கடிதங்களை உரிய தரப்புக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக அனைத்து மாகாண கல்வி திணைக்களங்கள், வலைய மற்றும் கோட்ட கல்வி அதிகாரிகளும் தங்களது பணிகளுக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

MSC Messina : இலங்கை கடல் எல்லையில் இருந்து வெளியேறியது

முஸ்லிம் காங்கிரஸ் – மக்கள் காங்கிரஸ் இணைந்து பொதுச்சின்னத்தில் களமிறங்க முடிவு [VIDEO]

இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையில் குறைவு