உள்நாடு

சுற்றிவளைப்பில் ஒரு தொகை தரமற்ற ஒக்ஸிமீட்டர் கண்டுபிடிப்பு

(UTV | கொழும்பு) – கொழும்பு மற்றும் காலி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஒரு தொகை தரமற்ற ஒக்ஸிமீட்டர் (Oximeter) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு, மஹரகம, பத்தரமுல்லை மற்றும் மாலம்பே பகுதிகளில் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்போது 4 சந்தேகநபர்களுடன் 600 இற்கும் மேற்பட்ட ஒக்ஸிமீட்டர்கள் கைப்பற்றப்பட்டதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பிரதான உணவு மற்றும் மருந்து பரிசோதகர் குறிப்பிட்டார்.

இதனைத்தவிர காலி, கராப்பிட்டிய, பத்தேகம மற்றும் அம்பலாங்கொட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில், மேலும் 252 தரமற்ற ஒக்ஸிமீட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

குருதியில் ஒக்சிஜன் அளவை பரிசோதிப்பதற்காக, தரமற்ற ஒக்ஸிமீட்டர்களை கொள்வனவு செய்வதால் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாக நேரிடும் என தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஒத்திகை இன்று

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 433 பேர் கைது

மைத்திரியின் மேன்முறையீட்டு மனுவை விசாரிக்க கோரிக்கை