கேளிக்கை

சுருதிஹாசனுக்கு டிசம்பரில் டும் டும் டும்?

(UTV|INDIA)-சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். கமல்ஹாசனுடன் சபாஷ் நாயுடு படத்தில் நடிக்கிறார். வேறு படங்களில் நடிக்க அவர் கால்ஷீட் கொடுக்கவில்லை. அவர் சினிமாவை விட்டு ஒதுங்குவதாக தகவல் பரவி உள்ளது. இதற்கு பதில் அளித்த சுருதிஹாசன் சினிமாவை தவிர்த்து வேறு வாழ்க்கையும் இருக்கிறது. பாடல், இசையில் எனக்கு ஆர்வம் இருக்கிறது. அதில் கவனம் செலுத்துகிறேன். நல்ல கதைகள் அமைந்தால் நடிப்பேன் என்றார்.

சில மாதங்களுக்கு முன்னால் சுருதிஹாசனுக்கும், லண்டன் நடிகர் மைக்கேல் கார்செல்லுக்கும் காதல் மலர்ந்துள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்கள் இணையதளங்களில் வெளியாகி வந்தன. சுருதிஹாசனின் தாய் சரிகா மும்பையில் வசிக்கிறார்.

மைக்கேலை அழைத்துச்சென்று சரிகாவிடம் சுருதிஹாசன் அறிமுகம் செய்து வைத்தார். அந்த படங்களும் வெளிவந்தன. பின்னர் சென்னைக்கு அழைத்து வந்து தந்தை கமல்ஹாசனிடமும் அறிமுகப்படுத்தினார். சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சியொன்றிலும் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டார்கள்.

அப்போது தமிழ் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையை மைக்கேல் உடுத்தி இருந்தார். சுருதிஹாசன் பட்டு சேலையில் இருந்தார். இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டதா? என்ற பரபரப்பு நிலவியது. ஆனால் சுருதிஹாசன் தரப்பில் அது மறுக்கப்பட்டது. ஆனாலும் இருவரும் ஜோடியாகவே சுற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில் மைக்கேல் கார்செல் காதலை உறுதிப்படுத்தி அவரது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிட்டு இருக்கிறார். சுருதிஹாசனும், மைக்கேலுக்கு இன்ஸ்டாகிராமில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து காதலை வெளிப்படுத்தி இருக்கிறார். இருவரும் வருகிற டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

விடுதலைப்புலிகள் தலைவராக பாபிசிம்ஹா…

பிரபல நடிகைகளுடன் குடித்து விட்டு கும்மாளம் போடும் தனுஷ்!…வைரலாகும் காணொளி

குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா