உள்நாடு

சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஜனாதிபதியுடன் மீள பேச்சுவார்த்தை

(UTV | கொழும்பு) – இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவை அப்பதவியில் இருந்து நீக்கினால், சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஜனாதிபதியுடன் மீள பேச்சுவார்த்தை நடத்தத் தயாரென நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகள் ஒன்றிணைந்து, தற்சமயம் கொழும்பு நடத்தும் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இயக்கும் குழுவினர், தற்போது தமது தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு சென்று, வரப்பிரசாதங்களை வழங்கி, மீண்டும் அரசாங்கத்துடன் இணைத்துக்கொள்ளும் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.

Related posts

சொய்சபுர தாக்குதல் சம்பவம்; பிரதான சந்தேக நபர் உயிரிழப்பு

இன்று 2 மணி நேரம் மின்வெட்டு

பாராளுமன்றத்திற்கு சுற்றுப்பயணம் மேற் கொண்ட அங்கவீனமுற்றோர்!