உள்நாடு

சுமார் 998 கிலோ கிராம் வெடி பொருட்கள் சிக்கின

(UTV | கொழும்பு) – மன்னார், சாந்திபுரம் கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 998 கிலோ 750 கிராம் நிறையுடைய 7,990 வோட்டர் ஜெல் (ஜெலெட்டின்) குச்சிகளுடன் இரண்டு சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையின் தம்மென்ன மற்றும் கஜபா விசேட கடற்படை குழுவினர் மன்னார் சாந்திபுரம் கடற்கரை பகுதியில் இன்று (20) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேகத்திற்கிடமான வீட்டிலிருந்து7,990 வோட்டர் ஜெல் வெடி பொருள் குச்சிகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 54 மற்றும் 57 வயதுடைய சாந்திபுரம் மற்றும் வங்காலை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்தனர்.

வெடிபொருட்கள் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பில் கடற்படையினர் மற்றும் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஹிருணிகா பிரேமச்சந்திர கைது

குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை உயர்வு

தேர்தலில் ஜனாதிபதி ரணிலுக்கே ஆதரவு மொட்டு கட்சி எம்பி சந்திரசேன