உள்நாடு

சுமார் 6 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் – 6 பேர் கைது

(UTV|கொழும்பு) – தெஹிவளை மற்றும் மஹரகம பகுதிகளில் சுமார் 6 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்றிரவு(24) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 4 கிலோ 290 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுளளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஹெரோயினுடன் மாலைதீவு பிரஜைகள் இருவர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை 6 நாட்கள் தடுத்துவைத்து விசாரணை செய்யவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

இடியுடன் கூடிய மழை

நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

editor

மஹிந்த,திலங்க இராஜினாமா!