உள்நாடு

சுமார் 370 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

(UTV|கொழும்பு)- ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தியுள்ள காரணமாக தமது சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்ல முடியாது கொழும்பில் தங்கியிருந்த 370 பேர் இன்று தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்கமைய, 23 மாவட்டங்களைச் சேர்ந்த குறித்த நபர்கள் இன்று பேலியகொடை விஜயகுமாரதுங்க மைதானத்திலிருந்து, தமது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு, இவர்கள் பஸ்களில் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கொரோனா பலி எண்ணிக்கை 2,011 ஆக அதிகரிப்பு

 களுத்துறை மாணவி மரணம் – புதிய திருப்பம்

பாராளுமன்ற அமர்வு தொடர்பிலான தீர்மானம்