உள்நாடு

சுமார் 2.4Kg ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

(UTV |  கம்பஹா) – வத்தளை, ஜா-எல மற்றும் சப்புகஸ்கந்தை ஆகிய பகுதிகளை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்டு வந்த போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தளை – ஹுணுபிட்டிய பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரிகளால் நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 2.4 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts

சாக்கு போக்குடன் காலத்தை கழிப்பது மக்களுக்கு செய்கின்ற துரோகம் – ஹரீஸ் MP

ஹெரோயின் – போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

IMF உடனான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் இந்த வாரம்