கிசு கிசு

சுமார்  170 ஆண்டுகளுக்கு பின்னரான சாதனை

(UTV | இங்கிலாந்து) – இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) 57 வயதில் 7 ஆவது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் (Boris Johnson), கடந்த 2019 ஜூலையில் பிரிட்டன் பிரதமராக பொறுப்புக்கு வந்தார்.

அவர் அதற்கு முன்பாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சர், லண்டன் மேயர் உள்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். போரிஸ் ஜான்சனின் (Boris Johnson) முதல் மனைவி மோன்ஸ்டின் ஓவன் 1993-ல் காலமானார். மோன்ஸ்டின் ஓவனுக்கும் போரிஸ் ஜான்சனுக்கும் குழந்தைகள் இல்லை.

அதன் பின்னர் பிரபல வழக்கறிஞர் மரினா வீலரை 1993-ல் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த ஜோடி 2020-ல் விவாகரத்து பெற்றது.

இதற்கிடையே, 2019 இறுதியில், தனக்கும் அரசியல் செயற்பாட்டாளர் கேரிக்கும் இடையே நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் போரிஸ் ஜான்சன். அத்துடன் திருமணத்திற்கு முன்பாகவே இந்த ஜோடிக்கு 2020 ஏப்ரலில் மகன் பிறந்தார்.

பின்னர் கடந்த மே மாதம் போரிஸ் ஜான்சனும், கேரியும் கத்தோலிக்க முறைப்படி எளிமையாக திருமணம் முடித்துக் கொண்டனர்.

இந்நிலையில் போரிஸ் – கேரி தம்பதிக்கு லண்டன் தேசிய அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதேவேளை ஒமைக்ரான் வைரஸ் பிரிட்டனில் பரவி வருவதால், ஜான்சன் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். அவர் கொரோனா வைரஸ் பரவலையும் சரியாக கையாளவில்லை என எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

அதேசமயம் இங்கிலாந்து பிரதமருக்கு எத்தனை குழந்தைகள் என்ற யூகம் பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் சந்தேகம் ஓடிக் கொண்டிருந்தது. இதுதொடர்பாக கடந்த செப்டம்பரில் நடந்த நேர்காணலின்போது பதில் அளித்த போரிஸ் ஜான்சன், மொத்தம் தனக்கு 6 குழந்தைகள் இருப்பதாக கூறிய நிலையில் தற்போது அது 7ஆக மாறியுள்ளது.

மேலும் இங்கிலாந்து பிரதமராக பொறுப்பு வகிக்கும் நபர், பிரதமராக பதவியில் இருக்கும்போது 5 குழந்தைகளை பெற்ற நிகழ்வு 170 ஆண்டுகளுக்கு பின் இப்போது தான் அரங்கேறி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் மூத்த மகளுக்கு தற்போது 27 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று முதல் அரச பாடசாலைகளுக்கு விடுமுறை – கல்வியமைச்சு மறுப்பு

அமைச்சர் நிமல் சிறிபாலவின் வாகனத்திற்கும் டீசல் இல்லையாம்

த்ரிஷாவை திருமணம் செய்ய விரும்பும் நடிகை?