அரசியல்உள்நாடு

சுப நேரத்தில் நாட்டை அநுரவிடம் கையளித்தும், அன்று வாக்குறுதியளித்த எதுவும் இன்றுவரை நிறைவேற்றவில்லை – சஜித் பிரேமதாச

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தற்போது மூன்றாவது தேர்தலை நாம் எதிர்கொண்டுள்ளோம்.

இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் விருப்பு வாக்குகளை பதிவிடுவது தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்கு முன்னர், கடந்த இரண்டு தேர்தல்களிலும் அரசாங்கம் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனங்களில் எதனை தெளிவாக நடைமுறைப்படுத்தியுள்ளது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

கொள்கைப் பிரகடனத்தில் உள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசியலில் பிரகடனப்படுத்தப்படுவதும் நடைமுறைப்படுத்தப்படுவதும் என இரு அம்சங்கள் காணப்படுகின்றன. பிரகடனப்படுத்தப்படுவதற்கும் நடைமுறைப்படுத்தப்படுவதற்கும் இடையில் இடைவெளியை விட்டுவிடாமல் சொன்னதை செய்வது சிறந்த அரசாங்கமொன்றின் குறிகாட்டியாகும்.

கடந்த இரண்டு தேர்தல்களிலும் சுபீட்சமான நாட்டையும் அழகிய வாழ்க்கையையும் நாட்டு மக்களுக்கு பெற்றுத் தருவோம் என கூறிய தரப்பினரின் வாக்குறுதிகளை நம்பி சுப நேரத்தில் அநுரவிடம் நாட்டை மக்கள் ஒப்படைத்தனர்.

ஆனால் அரசாங்கம் வாக்குறுதியளித்த எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அரிசி, பால் மா, தேங்காய் ஆகியவற்றின் விலைகளை குறைப்பதாக உறுதியளித்த போதும், பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளன. மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளைக் கூட வழங்க முடியாத அரசாங்கம் இன்று ஆட்சியில் இருந்து கொண்டிருக்கிறது.

தாம் முன்வைக்கும் முதலாவது வரவு செலவுத் திட்டத்திலயே 35,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவோம் என இந்த அரசாங்கம் உறுதியளித்த போதிலும், அந்த வாக்குறுதியும் இன்று மீறப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மாவனல்லை நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

சட்டத்தின் ஆட்சி இல்லாத நாடு

இன்று நாட்டனது சட்டம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் பாதாள உலகக் கும்பல்களின் கைகளுக்குள் சென்றுவிட்டது. வீட்டில், வீதியில், வேலை செய்யும் இடத்தில் கூட துப்பாக்கி பிரயோகம் நடத்தும் அளவுக்கு இவர்கள் தங்கள் ஆதிக்கத்தைப் பரப்பியுள்ளனர்.

இன்று சட்டத்தின் ஆட்சி இல்லை. அதனை பேணுவதற்கான ஏற்பாடுகளும் இல்லை. பாதாள உலக நடவடிக்கை சமூகத்தை ஆக்கிரமித்துள்ளன. இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் தீர்வு இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Related posts

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

வத்தளையின் சில பகுதிகளில் 18 மணிநேர நீர் விநியோகத் தடை

சில மாவட்டங்களில் நாளை தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம்