இந்த வருட இறுதியில் நாட்டில் பாரிய நிதி நெருக்கடி உருவாகும் என ஐக்கிய தேசிய கட்சி தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர்,
77 வருடங்கள் திருடர்கள் ஆட்சி செய்து மறுமலர்ச்சி அரசிடம் அரசாங்கத்தை ஒப்படைத்த போது உப்பு ஒரு பக்கட் 110 ரூபா. மறுமலர்ச்சி ஆட்சியின் 77 நாட்களில் உப்பு ஒரு பக்கட் 280 ரூபா.
சுனாமி வந்த போது கூட நாட்டில் உப்பு தட்டுப்பாடு ஏற்படவில்லை ஆனால் இன்று நான்கு பக்கமும் கடலால் சூழாப்பட்ட நாட்டில் உப்பு இறக்குமதி செய்கிறார்கள்.
40 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு ஆட்டோ கொண்டுவரப்பட்ட போது அதன் விலை 50 ஆயிரம் 40 வருடங்களுக்கு ஆட்டோவின் விலையை 8 லட்சத்தால் அதிகரித்து.
ஆனால் 77 நாட்கள் மருமலர்ச்சி ஆட்சியில் ஆட்டோவின் விலை 20 லட்சமாக அதிகரித்துள்ளது என கூறினார்.