உள்நாடு

சுந்தராபொல குப்பைமேட்டில் தீ பரவல்

(UTV|குருநாகல் )- குருநாகல் சுந்தராபொல குப்பைமேட்டில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சுந்தராபொல குப்பை மேட்டின் 7 ஏக்கர் பரப்பு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது.

பரவிய தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர விமானப் படையினரின் உதவி கோரப்பட்டுள்ளது.

தீயை அணைப்பதற்காக குருநாகல் நகர சபை மற்றும் இடர் முகாமைத்துவ நிலையம் என்பன இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் ஜானக ஹந்துன்பத்திரன தெரிவித்துள்ளார்.

Related posts

ஒவ்வொரு மாதமும் கடன், கடன் சேவை விவரங்களை சமர்ப்பிக்க கோரிக்கை

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டிலிருந்து நிசங்க சேனாதிபதி உட்பட இருவர் விடுதலை

இறக்குமதியாகும் பெரிய வெங்காயத்திற்கான வரியை அதிகரிக்க கோரிக்கை