உள்நாடு

சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம்

(UTV | கொழும்பு) – 2023 ஆம் ஆண்டு தேசிய சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் தமிழிலும் பாடப்படும் என ஈபிடிபி கட்சியின் தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

தேசிய சுதந்திர தின நிகழ்வின் போது தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என அவர் நேற்று (15) சமர்ப்பித்த யோசனையை அமைச்சரவை ஏற்றுக்கொண்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது தேசிய சுதந்திர விழாவின் இறுதியில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டதாகவும், ஆனால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுவது நிறுத்தப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், தேசிய நிகழ்வுகளின் போது தமிழில் தேசிய கீதத்தை பாடுவது இந்நாட்டு தமிழ், முஸ்லிம் மக்களின் மகிழ்ச்சிக்கும் அபிமானத்திற்கும் அவர்களின் மனங்களை வெல்வதற்கும் பெரும் காரணமாக அமையும் எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

இலங்கை இன்னொரு மொரோக்கோவாக மாற வேண்டாம் – மஹிந்த

பிரதமரின் செயலாளராக அனுர நியமனம்

கொரோனா வைரஸ் – மேலும் இருவர் பூரண குணமடைந்தனர்