உள்நாடு

“சுதந்திர தினத்தன்று ரஞ்சன் விடுதலையாவார்” – சஜித் [VIDEO]

(UTV | கொழும்பு) – சுதந்திர தினத்தன்று ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்படுவார் என தாம் உறுதியாக நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று (03) காலை சிறைச்சாலையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவைச் சந்தித்துப் பேசியதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

“ஒரு கலைஞராக, அவர் கலைத் துறைக்கு பெரும் சேவை செய்து வந்தார். தனது கொடுப்பனவுகள், சம்பளம், சலுகைகள் என அனைத்தையும் அரச சேவைக்காக அர்ப்பணித்த தலைவர் என்ற வகையில், அவர் தனது பொதுச் சேவையை மேலும் வலுப்படுத்தி, நாளை முழுமையாக விடுதலை பெறுவார் என நம்புகிறோம்.

மனிதாபிமானத்திற்கு முன்னுரிமை அளித்து மனிதாபிமானிகளின் பூரண சுதந்திரத்திற்காக அவரை நாளை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்றேன். மனித நேயத்திற்காக நான் இந்த கோரிக்கையினை முன்வைக்கிறேன்..” என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Related posts

தனியார் வைத்தியசாலைகளில் மருத்துவ சேவைகள் மட்டு

பாராளுமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு – ரஞ்சித் மத்தும பண்டார

editor

மேலும் 08 கடற்படை உறுப்பினர்கள் பூரண குணம்