விளையாட்டு

சுதந்திரக்கிண்ண T20: முதல் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்களால் வெற்றி

(UTV|COLOMBO)-சுதந்திரக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்களைப் பெற்றது.

முதலிரண்டு விக்கெட்களும் 9 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்ட போதிலும், ஷிகர் தவான் 90 ஓட்டங்களை விளாசி அணியை வலுப்படுத்தினார்.

மனிஷ் பாண்டே 37 ஓட்டங்களையும், ரிஷபா பான்ட் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் துஷ்மந்த சமீர 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 5 விக்கெட்களை இழந்து 18.3 ஓவர்களில் வெற்றியிலக்கை எட்டியது.

குசல் பெரேரா 37 பந்துகளுக்கு 66 ஓட்டங்களைப் பெற்றார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மெத்தியூஸ் உபாதை காரணமாக போட்டிகளில் பங்கேற்கமாட்டார்?

அவுஸ்திரேலியா முதலில் துடுப்பாட்டம்

30 பாடசாலைகள் மத்தியில் மகளிர் கிரிக்கெட் போட்டி