ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவை அவதூறு செய்யும் காணொளிகளை சமூக ஊடகங்களில் பரப்புவதைத் தடுக்கும் வகையில், முன்னைய விசாரணையின் போது பிறப்பிக்கப்பட்ட நிபந்தனை தடை உத்தரவை நீட்டித்து கொழும்பு தலைமை நீதிவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி தேஷான் அலுவிஹாரே, சம்பவம் தொடர்பான சாட்சியங்களை முன்வைத்து, வழக்கை அடுத்த மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்திவைத்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
நிபந்தனை உத்தரவு முதல் மற்றும் மூன்றாவது பிரதிவாதிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இரண்டாவது பிரதிவாதிக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் கிடைக்காதது தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பது தொடர்பில் ஆராயுமாறும் நீதிமன்றப் பதிவாளரை நீதிவான் அறிவுறுத்தினார்.