ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுஜீவ சேனசிங்க தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குற்றப் புலனாய்வுத் பிரிவினால் தனக்கு எதிராக நடத்தப்பட்ட சட்டவிரோத விசாரணைகளால் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு தொடர்பாகவே உயர் நீதிமன்றம் மேற்படி அனுமதியை வழங்கியுள்ளது.
நீண்ட பரிசீலனைக்குப் பிறகு, குமுதுனி விக்ரமசிங்க, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய மூவர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு இன்று (13) இந்த உத்தரவை பிறப்பித்தது.
அதன்படி, பதில் பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வுத் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர், அதன் பணிப்பாளர் மற்றும் சட்டமா அதிபர் உட்பட 18 பேர் சம்பந்தப்பட்ட மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டனர்.
இன்றிலிருந்து 6 வாரங்களுக்குள் ஏதேனும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பிரதிவாதிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து மனு விசாரணையை செப்டம்பர் 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.