சூடான செய்திகள் 1

சுங்கப் பணியாளர்களது போராட்டம்-நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

(UTV|COLOMBO) சுங்க தொழிற்சங்கள் முன்னெடுத்து வரும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பெருமளவான அத்தியாவசிய உணவுப்பொருட்களின் துறைமுகத்தில் தேங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, சுங்க தொழிற்சங்கள் முன்னெடுத்து தொழிற்சங்க நடவடிக்கையினால் தாம் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்து புறக்கோட்டை அத்தியாவசிய பொருட்கள் மொத்த வியாபார உரிமையாளர்கள் கடையடைப்பில் ஈடுபடடனர்.

சுங்கத் திணைக்கள பணிப்பாளராக இருந்த பி.எஸ்.எம். சார்ள்ஸ் பதவி நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுங்க தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

இதன் காரணமாக தாம் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்து, புறக்கோட்டை மொத்த வியாபார நிலைய உரிமையாளர்கள் குறித்த கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதேவேளை, சுங்கத் திணைக்களத்தின் பணியாளர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ இன்றையதினம் தமிழ் செய்தி ஆசிரியர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது கருத்து வெளியிட்டிருந்தார்.

முன்னாள் அரசாங்க அதிபரான பி.எஸ்.எம். சார்ள்ஸ் திறமையான நிர்வாகி என்றும் அவரை மீண்டும் சுங்கப் பணிப்பாளர் பதவியில் இணைக்க வேண்டும் என்றும் இதன்போது மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

மேலும் இந்த சுங்கப் பணியாளர்களது போராட்டம் தொடரும் பட்சத்தில், நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

 

 

 

Related posts

போதை பொருள்களுடன் இருவர் கைது…

அமித் வீரசிங்கவின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

ஹிஸ்புல்லாவை குற்றப்புலனாய்வு தினைக்களத்திற்கு செல்லுமாறு தீர்ப்பு