உள்நாடு

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத பேரூந்துகளின் அனுமதி இரத்து

(UTV|கொழும்பு)- சுகாதார வழிமுறைகளுக்கு முன்னுரிமை வழங்கி பேரூந்து போக்குவரத்தை முன்னெடுப்பது கட்டாயமானது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத பேரூந்துகளின் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பேரூந்து ஆசனங்களுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் பேரூந்துகளை சுற்றிவளைப்பதற்கு நாடளாவிய ரீதியில் விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ரணில் சிங்கப்பூர் நோக்கிப் பயணம்

அரசின் இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல்

ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிக்கு அனுமதி