உள்நாடு

சுகாதார வழிகாட்டுதல்கள் தொடர்ந்தும் நீடிப்பு

(UTV | கொழும்பு) –  நாட்டில் தற்போது அமுலில் உள்ள கொவிட் தடுப்பு தொடர்பான புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் 2022 பெப்ரவரி 28 ஆம் திகதி வரை சுகாதார அமைச்சகத்தால் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொவிட் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் கொவிட் தொற்றினை கருத்தில் கொண்டு, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இந்த நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

மேலும், “சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை அவ்வப்போது புதுப்பித்து வருகிறோம். தற்போது அமுலில் உள்ள டிசம்பர் இறுதியில் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல் சுற்றறிக்கை ஜனவரி 31ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், அதனை பெப்ரவரி 28 ஆம் திகதி வரை நீடிக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார். இதேவேளை, இதுவரை நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு செயல்படுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்…” எனத் தெரிவித்திருந்தார்.

டிசம்பர் இறுதியில் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல் சுற்றறிக்கை;

Gallery

Gallery

Gallery

Gallery

Related posts

அமைச்சர் பிரசன்னவின் கோரிக்கை

தபால் திணைக்களத்தின் உள்ளகப் பணிகள் ஆரம்பம்

ரஷ்ய பெண்ணுக்கு இடையூறு – ஐந்து பேருக்கு விளக்கமறியல்