உள்நாடு

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

(UTV | கொழும்பு) – சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை இன்று (12) ஆரம்பமாகவுள்ளது.

COVID – 19 தொற்றுக்கு எதிரான சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதனால், பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் ஒரு மணிநேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை மத்திய நிலையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 2648 பரீட்சை மத்திய நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளதுடன்,
இம்முறை பரீட்சைக்காக 362,824 மாணவர்கள்கள் தோற்றவுள்ளனர்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்காக 12 மேலதிக மத்திய நிலையங்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

பரீட்சார்த்திகள் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக, பரீட்சை அனுமதி அட்டையுடன் தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது செல்லுபடியாகும் வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத்தரா தர உயர் தரப்பரீட்சை அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மூன்று ஊர்கள் முடக்கம்

ஓமானில் சிக்கியிருந்த 315 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

உயிர்த்த ஞாயிறு அறிக்கை தொடர்பான விவாதம் – 7ம் திகதி