உள்நாடு

சுகாதார துவாய் விலைகள் குறைப்பு

(UTV | கொழும்பு) – உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சுகாதார துவாய்களுக்கு இறக்குமதி செய்யப்படும் 5 முக்கிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அனைத்து வரிகளையும் நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளது.

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் சுகாதார துவாய்களுக்கு வரிச் சலுகை வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

இந்த வரிச்சலுகையுடன், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 10 சுகாதார துவாய்களின் விலை 50-60 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் அதிகபட்ச சில்லறை விலை 260-270 ரூபாயாக இருக்கும்.

மேலும் இறக்குமதி செய்யப்பட்ட முடிக்கப்பட்ட பொருட்களின் நுகர்வோர் சில்லறை விலைகளும் 18% அல்லது 19% குறையும்.

உரிய வரிச்சலுகைகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதுடன், உற்பத்தியாளர்கள் மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் போது உரிய வரிச்சலுகைகளை பெற்றுக்கொள்வதற்கு கைத்தொழில் அமைச்சின் செயலாளரின் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கும் தயார் செய்யப்பட்டுள்ளது என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சுங்க இறக்குமதி வரி 15%, 10% – 15% செஸ் வரி மற்றும் 5 மூலப்பொருட்கள் மற்றும் இடைநிலை பொருட்களின் இறக்குமதிக்கு 10% துறைமுகம் மற்றும் விமான நிலைய மேம்பாட்டு வரி நீக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் சுகாதார துவாய்களுக்கு VAT பூஜ்ஜிய விகிதம் அளிக்கப்பட்டுள்ளது.

முடிக்கப்பட்ட சுகாதார துவாய்களை இறக்குமதி செய்பவர்களும் பூஜ்ஜிய விகித VAT இன் பலனைப் பெறுகின்றனர்.

அந்தச் சலுகைகள் அனைத்தும் நெருக்கடி காலத்துக்கு அமுலில் இருக்கும்.

சுகாதார துவாய்களுக்கான மூலப் பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரி காரணமாக சுகாதார துவாய்களின் விலை அதிகரித்துள்ளதால், அந்த வரிகளை குறைக்குமாறு உள்ளூர் உற்பத்தியாளர்கள் அண்மையில் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

Related posts

ஊழியர் சேமலாப நிதி – தொழில் வழங்குநர்களுக்கு கடுமையான நடவடிக்கை

டீசல் தட்டுப்பாடு, பேரூந்து சேவைகள் மட்டு

பாராளுமன்றத் தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய காலி மாவட்ட சுயேட்சை குழு

editor