உள்நாடு

சுகாதார துறையினர் பணிப்புறக்கணிப்பில்

(UTV | கொழும்பு) – சம்பளம் மற்றும் கொடுப்பனவு உள்ளிட்ட சில பிரச்சினைகளை முன்வைத்து இன்று காலை 7 மணி முதல் தாதியர், இடைநிலை, நிறைவுகாண் சுகாதார மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கமைய, நாடு முழுவதும், 1, 103 வைத்தியசாலைகள் மற்றும் 365 சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை என்பனவற்றில் இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார தொழில் வல்லுனர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றைய பணிப்புறக்கணிப்பில் தமது சங்க உறுப்பினர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் என அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

Related posts

முதலாவது அமைச்சரவை கூட்டம் புதனன்று

சிவனடி பாத மலைக்கு புதிய மின் மாற்றிகள் – தொடரும் பணிகள்.

இலங்கைக்கான சீன தூதுவர் நியமனம்