உள்நாடு

சுகாதார சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பு இன்றும்

(UTV | கொழும்பு) – சில கோரிக்கைகளை முன்னிறுத்தி தாதியர்கள் உள்ளிட்ட 18 சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை இன்றும் தொடர்கின்றது.

தங்களது கோரிக்கைகள் தொடர்பில் இன்றைய தினம் கலந்துரையாடுவதற்காக சுகாதார அமைச்சரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த துணை வைத்திய சேவை ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

சம்பள உயர்வு உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் உள்ளிட்ட 18 சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் நேற்று காலை முதல் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலை மாணவரின் உடல்நிலை தேற்றம்

தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரசியல் அமைச்சரவை நியமனம்!

இஸ்ரேலில் கொல்லப்பட்ட இலங்கைப் பெண் குறித்து வெளியான தகவல்!