உள்நாடு

சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகத்தின் கோரிக்கை

(UTV | கொழும்பு) – கொரோனாவுக்கு எதிரான ஃபைசர் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸைப் பெறுவதற்காக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் மற்றும் வைத்தியசாலைக்குச் செல்பவர்கள், தமது மருத்துவ வரலாறு மற்றும் கடந்த கால கொரோனா தொற்று தொடர்பில் ஊசி செலுத்தும் ஊழியருக்கு தெரிவிக்க வேண்டும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

நேற்று (05) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது,

“தங்கள் தடுப்பூசி அட்டைகளுடன் கிளினிக்குகளுக்குள் செல்லும் நோயாளிகள் பூஸ்டர் தடுப்பூசியை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.

அதேவேளை, நான் முன்பே குறிப்பிட்டது போல், கடந்த 6 மாதங்களுக்குள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பூஸ்டர் டோஸ் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது தடுப்பூசியின் செயற்றிறன் மற்றும் இயற்கையான நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது” என்று சுட்டிக்காட்டினார்.

Related posts

பாலியல் துஷ்பிரயோக சம்பவம் – கணிதப் பாட ஆசிரியர் கைது

இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் பிரதமருடன் சந்திப்பு

editor

அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் இவைதான்