சூடான செய்திகள் 1

சுகாதார அமைச்சின் இரு பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன

(UTV|COLOMBO) சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சால் நடத்த ஏற்பாடாகியிருந்த, குடும்பநல உத்தியோகத்தர்களுக்கான செயற்றிறன் பரீட்சையும் வைத்திய அதிகாரிகளுக்கான பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரநிலையைக் கருத்திற்கொண்டே, இந்தமாதம் 27ஆம், 28ஆம் திகதிகளில் நடத்தப்படவிருந்த குறித்த இரு பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த இரு பரீட்சைகளும் நடத்தப்படும் திகதி பின்னர்அறிவிக்கப்படுமென, சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பதின்மூன்று “ப்ளசா”? சமஷ்டியா? வடகிழக்கு இணைப்பா? இவை குறித்து முதலில் பொது முடிவுக்கு, தமிழ் கட்சிகள் வர வேண்டும்

மழையுடனான காலநிலை தொடரும் சாத்தியம்…

டெங்கு நோய் ஒழிப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்