உள்நாடு

சுகாதாரத்துறைசார் தொழிற்சங்கங்கள் சில பணிப்புறக்கணிப்பு

(UTV | கொழும்பு) – நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் பதவி உயர்வு உள்ளிட்ட 14 கோரிக்கைகளை முன்வைத்து நிறைவு காண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் உட்பட மருத்துவ துறைசார் 14 தொழிற்சங்கங்கள் இன்று முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன.

இன்று (05) காலை 8 மணி முதல் இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட உள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், தெரிவுசெய்யப்பட்ட சில வைத்தியசாலைகளில், அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

Related posts

சுய விருப்பத்தில் அலி சப்ரி ரஹீம் விலகிச்செல்வாரா?

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சலா, உடனடியாக மருத்துவ ஆலோசனை​யை பெறவும்

கோப் குழு கூட்டத்தில் ரஞ்சித் பண்டாரவின் மகன் எழும் சர்ச்சை