உள்நாடு

சீரற்ற வானிலை – 134,484 பேர் பாதிப்பு – 3 பேர் பலி

சீரற்ற வானிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளது. 12 மாவட்டங்களில் 69 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 134,484 பேர் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 240 வீடுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்ப்பட்டுள்ளதுடன் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளது.

1753 குடும்பங்களைச் சேர்ந்த 9663 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சீரற்ற வானிலையில் கம்பஹா மாவட்டத்திற்கு அதிக பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. குறித்த மாவட்டத்தில் 20553 குடும்பங்களைச் சேர்ந்த 82839 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து கொழும்பு மாவட்டத்தில் 10914 குடும்பங்களைச் சேர்ந்த 40231 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நிலவும் அதிக மழையுடன் கூடிய வானிலையால் களு, களனி, ஜிங் மற்றும் அத்தனகலு ஓயா என்பன பெருக்கெடுத்துள்ளன. 6 மாவட்;டங்களுக்கு பூரண மண்சரிவு அனர்த்த எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த மனுஷ நாணயக்காரவின் சகோதரர் விளக்கமறியலில்

editor

ஜனாதிபதி நிகழ்த்திய கொள்கை பிரகடன உரை

கொழும்பின் முன்னணி பாடசாலை ஒன்றில் தீ விபத்து