உள்நாடு

சீரற்ற வானிலை காரணமாக கண்டி – மஹியங்கனை வீதிக்கு இரவு நேரங்களில் பூட்டு

கண்டி – மஹியங்கனை வீதி இன்று (21) மாலை 6:00 மணி முதல் மூடப்படவுள்ளது.

மறு அறிவித்தல் வரை நாளாந்தம் மாலை 6.00 மணிமுதல் மறுநாள் அதிகாலை 6.00 மணிவரை இவ்வாறு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக கண்டி – மஹியங்கனை வீதியின் கஹடகொல்லவுக்க அருகிலுள்ள 18 வளைவுப் பகுதியில் பாறைகள் இடிந்து விழும் அபாயம் இருப்பதன் காரணமாக இவ்வாறு மூடப்படுவதாக கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று 348 பேருக்கு கொரோனா தொற்று

ஜனாதிபதி தாயகம் திரும்பினார்

எதனோல் இறக்குமதிக்கு தடை [VIDEO]