உள்நாடு

சீரற்ற வானிலையால் 20 மாவட்டங்களில் பாதிப்பு

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 20 மாவட்டங்களில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

அந்த மாவட்டங்களின் 166 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 80,642 குடும்பங்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

276,550 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5,305 குடும்பங்களைச் சேர்ந்த 16,553 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நீர்த்தேக்கங்களைச் சூழவுள்ள தாழ்நிலங்களில் வெள்ளம் தொடர்ந்தும் காணப்படுவதாக என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தெதுறு ஓயா மற்றும் மகாவலி கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரிப்பதால் வெள்ள நிலைமைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசன பொறியியலாளர் ஜி.டபிள்யூ.ஏ.சக்குரா தில்தாரா தெரிவித்துள்ளார்.

Related posts

லிட்ரோ எரிவாயு (Litro Gas) தொடர்பில் புதிய தகவல்- விலைப்பட்டியல்

சட்டவிரோத ஹம்மர் ரக வாகனங்கள் சுங்கத்துறை பிடியில் சிக்கியது

ஏழு விமானங்கள் ரத்து!